உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
உள்ளாட்சி அமைப்புக்கு ரூ.552 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
கிராம ஊராட்சிக்கு 441 கோடி ரூபாயும் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூபாய் 83 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
15வது நிதி ஆணையத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூபாய் 1104 கோடியில் முதல் தவணையாக ரூ ரூ.552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.