சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரி: தமிழக அரசு உத்தரவு
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்ய உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வந்தது
அந்த வகையில் சென்னையில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது
இந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது