பசுவின் வயிற்றில் 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்! மருத்துவர்கள் அதிர்ச்சி..
சென்னை திருமுல்லைவாயிலில் வசித்து வருபவர் முனிரத்தின. இவர் தனது வீட்டில் பசு மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக இவரது மாடு சிறுநீர் மற்றும் சாண இடாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளது.
அதனால் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு பசுவை கொண்டு சென்றார். பசுவை பரிசோதித்திப் பார்த்த மருத்துவர்கள், வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
பின்னர், முனிரத்தினம் பசுவை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.அங்கு பசுவை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் அடைத்துள்ளதைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, பசுவின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சுமார் 52 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியில் எடுத்தனர்.
பசு புல்களை, தாவரங்களை மேய்வற்கு வீதியிலும்,சாலையில், பரவியுள்ள பதிலாக நெகிழிகளை உண்டதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் துவக்கம் முதலே நெகிழி உபயோகத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.