ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (17:10 IST)

ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்து பைக்கை திருடிய நபர் ! வைரல் வீடியோ

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு டூவீலர் பைக் ஷோரூமுக்கு இரண்டு பேர் வந்தனர். அப்போது டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாகக் கூறிச் சென்றுவிட்டு, நண்பரை பினையம் வைத்து ஆட்டோவை திருடிச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகன கிரேஸ் பைக் ஷோரூமை நடத்தி வருபவர்  ஜான். நேற்று ஜானின் தம்பி எட்வின் கடையில் இருந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு இளைஞர் பைக் பற்றி விசாரித்து அதன் விலையை கேட்டுவிட்டுள்ளார் ஆட்டோ ஓட்டுநரும் அவருக்கா விலை பேசி, டெஸ்ட் டிரைவ் போகவேண்டுமென கூறியுள்ளார்.
 
பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இளைஞர் ஷோரூமுக்கு வரவேயில்லை. அதனால் அதிர்சி அடைந்த எட்வின் இதுபற்றி ஆட்டோகாரரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரை யார் என்றே தெரியாது எனவும் பைக்கை விலை குறைவாக பேசினால் கமிஷன் தருவதாகவும் தன்னிடம் கூறி எனை இங்கு அழைத்து வந்தார் என்று ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பைக்கை திருட்ச் சென்ற நபர் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரோசன் பிரபு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ