தொடர்புடைய செய்திகள்
- பித்த வெடிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் !!
- அழகு சிண்ட்ரல்லா... பிங்க் கௌனில் கார்ஜியஸ் சாக்ஷி அகர்வால்!
- தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!
- இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! – நாளை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
- மீண்டும் மம்தாவே ஆட்சியைப் பிடிப்பார் – கருத்துக் கணிப்பில் தகவல்!
ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 509% அதிகரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது. அதில் மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது சொத்துமதிப்புகளை பதிவு செய்தனர். அதில் கமல், சீமான், தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவரையும் சொத்து மதிப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அடுத்தபடியாக தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு பேசும் பொருளாகியுள்ளது. அதாவது, ஓ.பி.எஸ் மற்றும் அவரது மனைவி இருவரின் பெயரிலும் உள்ள ஒட்டு மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு 2016ம் ஆண்டு வரை 1.53 கோடியாக இருந்தது தற்பொழுது 7.82 கோடியாக அதிகரித்து உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ. 61,19,162 ரூபாயும்
மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ. 4,57,52,415
மேலும், ரூ 48,85,424 மதிப்புள்ள மஹிந்திரா ஜினியோ, டொயோடா , இன்னோவா என மூன்று கார்கள் உள்ளது.
அதேபோல் அவரது மனைவியுடம் ரூ. 43,34,377 மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் உள்ளது.
அசையா சொத்து மதிப்பு என்று பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏதும் இல்லை.
அவரது மனைவி பெயரில் அசையா சொத்து , ரூ 2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ரூபாய் மதிப்பில் உள்ளது. என அவரின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 509% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
