திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:03 IST)

நாம் தமிழரிலிரிந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்த 500 பேர்! - அதிர்ச்சியில் சீமான்??

Seeman

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் விலகி விஜய் கட்சியில் சேர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில் த.வெ.க கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக விஜய் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யின் மாநாட்டிற்கு பிறகு அவரை விமர்சித்து பேசி வருகிறார்.

 

மேலும், விஜய் கட்சி தொடங்கியிருந்தாலும் அவரது ரசிகர்கள் எனக்குதான் ஓட்டு போடுவார்கள், அதனால் விஜய் கட்சிக்குதான் வாக்குவங்கி குறையும் எனவும் சீமான் பேசியிருந்தார்.
 

 

இந்நிலையில் நாகப்பட்டிணத்தில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கட்சியிலிருந்து விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். நாகை மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் புதியவர்கள் கட்சியில் இணைந்தனர்.

 

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு விலகிய நிலையில் இவ்வாறு தொண்டர்களும் கட்சி மாறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

Edit by Prasanth.K