வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (10:09 IST)

‘இனிமேல் அவர் விண்வெளி நாயகன்… போஸ்டர்களில் அந்த பட்டம் கொடுக்கப்படும்’ – ரோபோ ஷங்கர் கருத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நேற்று திடீரென வெளியிட்ட அறிக்கையில் தன்னை உலகநாயகன் உள்ளிட்ட எந்த பட்டம் கொடுத்தும் அழைக்க வேண்டாம் என அறிவித்திருந்தார். அவரது அறிக்கையில் “இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.

இதை ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில் நடிகரும், கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான ரோபோ ஷங்கர் அவரை இனிமேல் ‘விண்வெளி நாயகன்’ என அழைப்போம் எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “கமல்ஹாசனை ‘உலக நாயகன்’ என்ற சிறிய கூண்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. அவர் இனிமேல் விண்வெளி நாயகன். உலகத்திலேயே விண்வெளி நாயகன் என்ற பட்டம் அவருக்கு மட்டும்தான் பொருந்தும். அதனால் இனிமேல் அவர் உலக நாயகன் கிடையாது. போஸ்டர்களில் இனிமேல் விண்வெளி நாயகன் என்றுதான் அடிப்போம்” எனக் கூறியுள்ளார்.