வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (08:34 IST)

4 ஆயிரம் போதை மாத்திரைகள், டானிக்குகள் பறிமுதல்! – சென்னையில் அதிர்ச்சி!

சென்னை வேளச்சேரியில் போதை மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை விற்று வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வேளச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 5 பேர் நடமாடியுள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரித்த போலீஸார் அவர்களது பையை சோதனை செய்தபோது அதில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் மற்றும் 20 டானிக் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். சளி, இருமலுக்கு பயன்படுத்து இந்த டானிக்குகளை போதை பொருளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்த போலீஸார் மாத்திரைகள், டானிக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.