1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (13:18 IST)

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழப்பா? மறுக்கும் மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிர் இழந்ததாகவும் பத்துக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீஸோ, மருத்துவர்களோ இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் குடிப்பழக்கமே இல்லாத ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அதனால் தவறான தகவலை பார்க்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
கள்ளச்சாராயத்தால் உயிரிழக்கவில்லை என்றால் ஐந்து பேர் எதனால் உயிரிழந்தனர் என்பது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருவது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva