வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 12 ஜூன் 2024 (13:54 IST)

காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், வருமானவரித்துறை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில், சந்தன மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்டுள்ளது- பொது மக்கள் அதிர்ச்சி!

கோவை பந்தய சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் சிறுவர்களுக்கான பூங்கா அமைந்திருக்கும் வளாக அருகே வளர்ந்து இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெரிய அளவில் வளர்ந்து இருந்த மரத்தை வெட்டி சென்றதும், அருகில் மாவட்ட ஆட்சியர் இல்லம், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் மற்றும் இல்லம், வருமான வரி அலுவலகம் உள்ள பாதுகாப்பு மிகுந்த இடத்தில், துணிகர கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. 
 
போலீசார் ரோந்து பணியில்  வழக்கமாக ஈடுபடும் பகுதியிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது கோவை நகரில் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளது.
 
சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். 
 
பந்தயம் சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தனிப்படை அமைத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.