1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (21:07 IST)

சச்சின் பைலட்டுக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

காங்கிரஸ் இளம் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் சச்சின் பைலட்.  துணை முதல்வரான இவருக்கு அசோக் கைலாட்டுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்,பின்னர் இருவரும் சமாதானமானார்கள். இதனால் சச்சின் பைலட் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்நிலையில் இன்று சச்சின் பைலட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சமுக வலைதளத்தில் உறுதி செய்துள்ள அவர் கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.