தமிழகத்திற்கு 5.56 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்!!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (09:49 IST)
தமிழகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
 
விரைவில் அனைத்து மக்களுக்கும் இந்த தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் மத்திய அரசுக்கு இந்த தடுப்பூசியை ரூ.200க்கு சலுகை விலையில் தர சீரம் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. 
 
அதன்படி, தமிழகத்துக்கு இன்று காலை 11 மணிக்கு 5.56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசிகள் அனைத்தும் புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் 50 வயதிற்கு மேலே உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :