செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (18:57 IST)

வீட்டை சுத்தம் செய்யும் போது நகைகளை குப்பையில் வீசிய பெண் – இப்படி கூட நடக்குமா?

புனேவில் தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்த பெண் ஒருவர் தனது நகைகளைக் குப்பையில் வீசியுள்ளார்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்த போது தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் ஒழித்துள்ளார் ரேகா செலுகார் என்ற பெண். அப்போது தனது பழைய ஹேண்ட்பேக் ஒன்றையும் குப்பையோடு குப்பையாக குப்பை லாரியில் போட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்துக்குப் பின்னரே அந்த ஹேண்ட்பேக்கில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

இதன் பின்னர் அவர் புனே மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு நடந்ததை சொல்ல அவர்கள் அந்த பகுதிக்கு வந்து சென்ற லாரியை வைத்து அது எந்த குப்பைக் கிடங்குக்கு சென்றிருக்கும் கணித்து அங்கு சென்று தேடியுள்ளனர். நீண்ட நேர தேடலுக்குப் பின் அந்த ஹேண்ட் பேக் கிடைத்துள்ளது. இதையடுத்து ரேகா புனே மாநகராட்சிக்கு நன்றி சொல்லியுள்ளார்.