வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2019 (19:58 IST)

8 ஆண்டுகளில் 5,200 கோடி போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கடந்த 8 ஆண்டுகளில் 5,200 கோடி போக்குவரத்து துறையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

தமிழகத்தில் முதன்முறையாக முழுமையான தொகையுடன் கூடிய ஒய்வூதியப்பலன்களை கும்பகோணம் மண்டலத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூர் கோவை ரோட்டில் உள்ள வி.என்.சி. மஹாலில், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வு பெற்ற தொழிலார்களுக்கான பணபலன்களுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கும் விழா தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பொன்முடி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆகியோர் உள்பட அரசுத்துறை அதிகாரிகளும், கூட்டுறவுத்துறை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட, இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மண்டலத்தில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 பகுதிகளில் இருந்து  அரசு போக்குவரத்து கழகத்தில் ஒய்வு  பெற்ற  892  பேருக்கு  ரூ  219.80  கோடி  தொகைக்கான காசோலைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  வழங்கினார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய,. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., தமிழக போக்குவரத்து  துறை  வரலாற்றிலேயே  ஒரே  தொகையாக  ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு  சுமார்  1000  ஆயிரம்  கோடிக்கு  மேல்  வழங்கியது.  இப்போது  தான் என்றும், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான்., தேசிய அளவில் போக்குவரத்து துறைக்கு 9 விருதுகள்  கிடைத்துள்ளது என்றும், கர்நாடக மாநிலத்தில் கூட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே போக்குவரத்து இயக்கப்படும் நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டுமே எந்த நேரத்திலும் பொதுமக்களின் வசிதிக்காகவும், அவர்களின் சவுரியத்திற்காகவும், பேருந்துகள் இயக்கப்படுகின்றன , மேலும், தனியார் பேருந்துகளையே  மிஞ்சுகின்ற  அளவிற்கான  அரசு பேருந்துகள்  இயங்கின்றன. 

மிக  விரைவில்  சென்னையில்  50  குளிர் சாதனப்  பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 820 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். மேலும், இந்திய அளவில் தமிழகம் 24 சதவிகித அளவில் போக்குவரத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்றார்.