திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (18:13 IST)

திருச்சி திமுகவின் மோதல் சம்பவம்: 4 பேர் சஸ்பெண்ட் என அறிவிப்பு..!

திருச்சி திமுகவினர் மோதல் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திருச்சியில் இன்று திருச்சி சிவா மற்றும் கேஎன் நேரு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர் என்பதும் இரு தரப்பினார் மாறி மாறி காவல் துறையினரிடம் கொடுத்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் திருச்சி சிவா வீட்டில் உள்ள கார் உள்பட விலை உயர்ந்த பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் திருச்சி சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 
 
திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்து செல்வம், துரைராஜ், ராமதாஸ் ஆகிய நான்கு பேரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran