திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (14:12 IST)

பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பரிதாப பலி: மதுராந்தகம் அருகே சோகம்

மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் பரிதாபமாக சக்கரத்தில் சிக்கி பலியானதாகவும் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு தான் பயணம் செய்து வருகின்றனர் என்று பெரும்பாலானோர் குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற பகுதியில் பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் சிலர் பயணம் செய்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக 4 மாணவர்கள் கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினர்

மேலும் சில மாணவர்கள் கீழே விழுந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டாம் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கூறிய போதிலும் மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்கவில்லை என்றும் இதனால் இந்த விபரீத விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran