வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (18:30 IST)

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!

அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு - அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசு உதவியுள்ளது.
 
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. 
 
அரசு வேலைவாய்ப்புகளிலும், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் பணி நியமனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
 
நிரப்பபடாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.