1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:20 IST)

புதுக்கோட்டையில் மேலும் 4 பேருக்கு டெங்கு; பாதிப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது!

dengue
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டையில் பாதிப்புகள் அதிகரித்துள்ளது.



தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு பாதிப்புகள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சில பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் சமீபத்தில் டெங்கு பாதித்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் 37 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றுமாறும், மாஸ்க் அணியுமாறும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K