செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:00 IST)

4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள்...2,500 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு - முதல்வர் தகவல்!!

இந்தியாவில் கொரொனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க மத்திய, மாநில  அரசுகள் கடுமையான உத்தரவுகளை அமல்படுத்திவருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதுக்காப்பு முறைகள் குறித்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்  தற்போது முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில் ,தமிழகத்தில் முகக்கவசங்கள், மாத்திரைகள் போதியளவில் இருக்கின்றன. புதிதாக 2,500 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும்,  4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்து சேரும்; 2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன, விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.