நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த யோகிபாபு

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த யோகிபாபு
Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (13:19 IST)
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1250 கிலோ அரிசி கொடுத்த யோகிபாபு
ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் பெப்சி அமைப்பினர் மட்டுமின்றி நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்சி அமைப்பினர்களுக்கு பெரிய நடிகர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்த போதிலும் நலிந்த நடிகர்களை கோலிவுட்டில் யாருமே கண்டு கொள்ளவில்லை
இந்த குறையை போக்கும் வகையில் நடிகர் யோகிபாபு, தன்னுடைய சார்பில் நலிந்த நடிகர்களுக்கு 1250 அரிசி மற்றும் பருப்புகளை கொடுத்து உதவி செய்துள்ளார். பெப்சி அமைப்பினர் போலவே நடிகர்களும் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு தன்னால் முடிந்த இந்த உதவியை செய்திருப்பதாக யோகிபாபு தெரிவித்துள்ளார்.

யோகிபாபுவை அடுத்து சில முன்னணி நடிகர்களும் நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நலிந்த நடிகர்களுக்கு யோகி பாபு அரிசி கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :