தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதை, போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!
- கனமழை எதிரொலி: நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ரத்து..! எத்தனை நாட்கள்?
- போதிய பயணிகள் இல்லை: சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து!
- தொடர்ந்து மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு இருக்காது-எரிக்கு நீர்வரத்து குறைவாக வருவதாக அதிகாரிகள் தகவல்!
- நாகை இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக இரண்டு நாட்கள் ரத்து-கப்பல் நிர்வாகம் அறிவிப்பு!
பேசின் பிரிட்ஜ்–வியாசர்பாடி ரயில் மேம்பாலத்தில் மழை நீர்: 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள ரயில் மேம்பாலத்தில் மழை நீர் அடைத்துள்ளதால், ஈரோடு, திருப்பதி, மைசூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் பல விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (அக். 15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல, மாலை 4.35 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயிலும், இரவு 11 மணிக்கு புறப்பட உள்ள சென்னை சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரவு 9.15 மணிக்கு புறப்பட இருக்க வேண்டிய சென்னை சென்ட்ரல் – மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
