புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (12:03 IST)

4 நாட்களுக்கு தொடர் விடுமுறையா??

மே 2 ஆம் தேதியை விடுமுறையாக இல்லாமல் உள்ளது, அன்று விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

 
மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையும், மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில் மே 2 ஆம் தேதியை விடுமுறையாக இல்லாமல் உள்ளது. எனவே அன்று விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. 
 
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே 1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
 
அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.