1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (16:12 IST)

39 தொகுதிகளுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்..! பட்டியலை வெளியிட்டார் பிரேமலதா..!!

premalatha
மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா உத்தரவிட்டுள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.   அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.
 
அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 
 
இதனைத் தொடர்ந்து  அதிமுக – தேமுதிக இடையே நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால் அதிமுக தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். 


நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.