செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 ஜனவரி 2022 (13:32 IST)

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் இருந்து 35 பக்தர்கள் சென்னை அருகே உள்ள மேல்மருத்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து அவர்கள் மீண்டும் கர்நாடகாவிற்கு திரும்பிச் சென்றபோது அவர்கள் அனைவருக்கும் அதாவது 35 பக்தர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை அந்த 35 பக்தர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது என்பதும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேல்மருவத்தூர் சென்று திரும்பிய 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கர்நாடக மாநில அரசை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது