பயங்கரவாதிகளுடன் தொடர்பு: தமிழகத்தில் 33 பேர் கைது.. திடுக்கிடும் செய்தி
தமிழகத்தில் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தென் இந்தியாவில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக திருப்பதி, வெங்கடசலபதி கோவில், பெங்களூர், ஆகிய நகரங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், தமிழகத்தின் மன்னர் வளைகுடா பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆள் இல்லாமல் மிதந்து கொண்டிருந்த படகை கண்டு பிடித்தனர். அதில் மீன் பிடி பொருட்கள் ஏதும் இல்லாததால் அதில் பயணித்தவர்கள் எங்கே? என கேள்வி எழுந்தது. மேலும் அதில் பயங்கரவாதிகள் பயணித்து வந்தனரா? என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக 33 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் 127 பேர் ஐ.எஸ்.பயங்கரவாதிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரி அலோக் மிட்டல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.