வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (17:29 IST)

வெளியே சுற்றித் திரிந்தால் ரூ. 2000 அபராதம்

கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்றுமுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ –பாஸ் கட்டாயம் என நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்தது. இருப்பினும் திருமணம் என்ற காரணத்தைக் கூறி நிறையப்பேர் வெளியே சுற்றுவதால் இ-பாஸில் திருமணத்தை நிறுத்திவைத்துள்ளது

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாவது:

சென்னையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நோயாளிகள் வெளியே சுற்றித்திரிந்தால் அவர்களிடம் ரூ.2000 அபராதம் வசூலிக்கப்பட்டும். அத்துடன் அவர்களை கோவிட் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.