1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (14:48 IST)

உத்தர பிரதேசத்திற்கு 31ஆயிரம் கோடி.. தமிழகத்திற்கு 7 ஆயிரம் கோடி! - மத்திய அரசு ஒதுக்கிய வரிப்பகிர்வு!

New Parliament

மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர வேண்டிய வரிப்பகிர்வு தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

 

 

ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளின் அடிப்படையில் வசூலாகும் தொகையை மத்திய அரசு மொத்தமாக வசூலித்து அதில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை வழங்க வேண்டும். அவ்வாறாக தற்போது மத்திய அரசு ரூ.1,78,173 கோடியை விடுவித்துள்ளது.

 

இதில் உத்தர பிரதேசத்திற்கு மட்டும் அதிகபட்சமாக 31,962 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து பீகாருக்கு 17,921 கோடி ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கேரளாவிற்கு 3,430 கோடியும், தெலுங்கானாவிற்கு 3,745 கோடியும் வரிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K