வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (08:59 IST)

மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டத்தில் ஹிந்தி இல்லாமல் தமிழில் அச்சிட வேண்டும்,புதுச்சேரி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்!

புதுச்சேரி அரசு உள்ளாட்சி துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணி" கடந்த 17.ந் தேதி தொடங்கி 02.ந் தேதி வரை இரு வார காலத்திற்கு நகரம் முழுவதும்
பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்,
நிறைவு விழா  கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியையும் (Cyclothon) ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் Plog Run ஓட்டத்தினையும் உழவர்சந்தையைப் தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தனர். 
 
இதனைத் தொடர்ந்து, "தாயின் பெயரில் ஒரு மரம்" உறுதி மொழியினை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில், தூய்மையே சேவை (Swachchatha ki Seva) இருவார நலப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.
 
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.....
 
மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் இந்தியில் இருக்கு இதனை பார்க்கும் மக்களுக்கு எப்படி புரியும்,அதனை நான் பார்த்தாலும் எனக்கு புரியவில்லை மக்களுக்கு எப்படி புரியும் என கேள்வி எழுப்பினார்... இதனால் ஹிந்தியில் இருக்கும் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு புரியும்படி அச்சிட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..
 
மேலும் உள்ளாட்சி துறை மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மக்களுக்கு தெரியும்படி அச்சிட வேண்டுமென கேட்டுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு தெரிய வேண்டிய ஒரு செய்தியை ஏன் தமிழில் அச்சிட படவில்லை முதல்வர் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
 
பிரதமரிடம், துணை நிலை ஆளுநர் பேசும் போது மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரி மக்களுக்கு புரியும்படி தமிழில் அச்சிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்... ஆனால் அதனை புதுச்சேரியில் இருக்கும் அதிகாரிகள் ஏன் செயல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்... எனவே மத்திய அரசின் திட்டங்கள் ஹிந்தியில் இருந்தால் அதனை தமிழில் மொழி பெயர்த்து மக்களுக்கு புரியும்படி அச்சிட வேண்டும் என வலியுறுத்தினார்.
 
விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.‌ பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,  பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.