இந்திய ரயில்வே துறையில் (RRB) Non-Technical பிரிவில் 11,558 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ரயில்வேயில் பல்வேறு தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு அவ்வபோது ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அவ்வாறாக தற்போது தொழில்நுட்பம் சாராத Non Technical பிரிவில் 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் ட்ரெய்ன் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டெண்ட், சீனியர் க்ளெர்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வயது வரம்பு 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், EWS பிரிவினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு
இந்த பணியிடங்களுக்கு பணிகளுக்கு ஏற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2024 ஆகும்..
மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிய RRBயின் அறிவிப்பை இந்த லிங்கில் காணலாம்: https://www.rrbchennai.gov.in/downloads/CEN-05-2024-NTPC-Graduate_a11y.pdf
Edit by Prasanth.K