சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:05 IST)

குழந்தைகளுக்கும் பரவும் கொரோனா ! தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் 98 என அறிவிக்கப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்தது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்லும் நிலையில் மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த எண்ணிக்கையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 31 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களிடம் இருந்துதான் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.