1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (06:50 IST)

கொரோனா இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா: எப்படி சாத்தியம்?

கொரோனா இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் இருந்த கேரளா, தற்போது முதல் 10 இடங்களில் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான முன்னேற்றமாக காணப்படுகிறது 
 
கேரள அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாகவும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு கேரள மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகவும் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது 
 
கேரளாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 55 பேர் குணமாகி உள்ளதாகவும் ஒரு சிலர் மட்டுமே புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் நிலையில் தற்போது கேரளாவில் வெறும் 178 பேர் மட்டுமே குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் கிட்டத்தட்ட குணமாகும் நிலையில் இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது 
 
உலக சுகாதார மையம் கொடுத்த அறிவுரையின்படி அதிரடி நடவடிக்கை எடுத்தது, அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தது ஆகியவையே கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக மீள்வதற்கு காரணம் என்று கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை பின்பற்றி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் கொரோனாவில் இருந்து விடுபட அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு முழு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது