1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2022 (11:06 IST)

கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி அருகே கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 3 வயது சிறுமி மரணம் அடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி நடந்து சென்று கொண்டிருந்தபோது குளிர்பானம் ஒன்று கீழே நடந்ததாக தெரிகிறது
 
 இதனையடுத்து அந்த குளிர்பானத்தை இருவரும் குடித்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவரது பாட்டி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது