வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (17:31 IST)

பாராட்டை பெறும் அளவுக்கு நடிகை வரலட்சுமி என்னசெய்தார் தெரியுமா...?

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடினமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். புதிய படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
வரலட்சுமி நடிப்பில் சண்டக்கோழி-2 ரிலீசுக்கு தயாராக உள்ளது. விஜய்யின் சர்க்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி, முற்றிலும்  மாறுபட்ட வெல்வெட் நகரம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பலரும் பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். அப்படி என்னதான் செய்தார்  தெரியுமா..? வரலட்சுமி படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது அரசு பள்ளி மாணவர்களை சிலர் நடந்து சென்று  கொண்டிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக காரை நிறுத்தி அந்த மாணவர்களை தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு, அனைத்து மாணவிகளின் வீட்டிலும் அவர்களை அழைத்து விட்டுவிட்ட பின் தான் வீட்டிற்கு கிளம்பினாராம்.
 
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காரில் பள்ளி மாணவிகளுடன்  சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு “இந்த மாணவிகளை நினைத்து பெருமை  படுவதாகவும், தினமும் இவர்கள் பள்ளி செல்வதற்காக 7 கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். இவர்களுடன் காரில் ஏற்றிக்கொண்டு அவரவர் வீட்டில் விட செல்வது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.