செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (18:40 IST)

அடுத்தவன் குழந்தைக்கு உன் பெயரா? மேக்கப் முதல்வருக்கு ஸ்டாலின் குட்டு

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெய்ரை கூட்ட தமிழக அர்சு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
 
கோயம்பேடு ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கருணாநிதியின் திட்டப்படி, அவரது மேற்பார்வையுடன் 1996-2001 திமுக ஆட்சியில் கட்டடப்பட்டது என்ற வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் ஸ்டாலின். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு, தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியல்ல; வெறும் காட்சி; அதுவும் பொம்மலாட்ட காட்சி. 
 
ஜெயலலிதா இருக்கும் வரை எம்.ஜி.ஆரை புறக்கணித்துவிட்டு, இன்று தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற மேக்கப் போட்டு முதல்வர், துணை முதல்வர் என அனைவரும் அசத்தலான நடிகர்களாகியிருக்கிறார்கள்.
 
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயரை சூட்டுகிறார்களாம். தங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை நிறைவேற்றி, அதற்கு தங்கள் கட்சியின் நிறுவனர் பெயரை சூட்ட திறமையற்ற ஆட்சியாளர்கள், கருணாநிதி ஆட்சி காலத்தில் நிறைவடைந்து பயன் தந்த ஒரு திட்டத்திற்கு தங்களது பெயரை சூட்டி, அடுத்தவர் குழந்தைக்குத் தன் பெயர் வைக்க ஆசைப்படுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.