வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 27 ஜூன் 2020 (18:24 IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,335 பேராக அதிகரித்துள்ளது.

 இன்று மட்டும் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்று ஒரே நாளில்  68 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால்  பலியானோர் மொத்த  எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 45 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக  51,699 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.