திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (11:40 IST)

ஐஐடியை அடுத்து மருத்துவ கல்லூரியில் பரவும் கொரோனா: 25 மாணவர்களுக்கு பாதிப்பு!

chengalpt
ஐஐடியை அடுத்து மருத்துவ கல்லூரியில் பரவும் கொரோனா: 25 மாணவர்களுக்கு பாதிப்பு!
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது செங்கல்பட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது 
முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வகுப்புகள் தொடங்கிய நிலையில் தற்போது கொரோனா அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
969 மாணவர்கள் படிக்கும் இந்த கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது