1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

தொடர்ந்து 3 ஆயிரத்தில் நீடித்து வரும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,545 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,94,938 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,002 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,51,248 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19,688 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
மதம் தாண்டிய காதல்; மதம் பிடித்தவர்கள் செய்த ஆணவக் கொலை! – ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!