செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (09:40 IST)

மக்களை தேடி மருத்துவம் - 25 லட்சம் பேருக்கு சேவை

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் மக்கள் நல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.  
 
அந்த வகையில் மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 25,40,394 பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.