திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (16:06 IST)

24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் - அதிர்ச்சி வீடியோ

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பள்ளப்பட்டி, செளந்திராபுரத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மதுபானக்கடை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானக் கடைகள் இயங்கி வருவதாக பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக புகார் தெரிவித்தார். 
 
ஆனால், தற்போது செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து காவல்துறை உதவியுடன், செந்தில் பாலாஜியை காவல்துறையினர் மற்றும் எடப்பாடி அ.தி.மு.க வினர் சீண்டும் விதமாக இந்த செயல் சட்ட விரோதமாக அந்த டாஸ்மாக் கடை  நடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துளளனர்.
 
இதேபோல, அதே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் பகுதியிலிருந்து ராஜபுரம் செல்லும் வழியில் உள்ள புளியம்பட்டி பகுதியிலும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் செல்வக்குமார் என்பவரது மதுபானக்கடையும் 24 மணி நேரமும் செயல்படுகின்றது என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
 

 
- சி. ஆனந்தகுமார்