முன் எப்போதும் இல்லாத வகையில் வாரிசுகள் களமிறங்கும் தேர்தல்.. யார் யார் தெரியுமா?
தமிழக அரசியலில் வாரிசுகள் அரசியல் என்பது புதிது இல்லை என்றாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான வாரிசுகள் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் எந்த கூட்டணியில் சேர்வது என்று பாமக இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா வேட்பாளராக களமிறங்குவார் என்றும் அவர் அனேகமாக தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே எல்.கே.சுதீஷ் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி திருச்சி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு திமுகவும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது
மேலும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் அவரது சகோதரர் போட்டியிட போவதாகவும் தேனி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதுபோக திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளும் களமிறங்கப் போவதாகவும் மொத்தத்தில் தமிழ்நாட்டில் இந்த முறை வாரிசு போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva