1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (17:50 IST)

2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் எப்போது?

2020 மூன்றாம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் நிலையில் 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் பொங்கல் பண்டிகைக்கு பிறகே நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தற்போது மழை வெள்ளப் பாதிப்பு தொடர்பான நிவாரண பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் சட்டப்பேரவை கூட்டத்தை சில நாட்கள் தள்ளிப் போட முடிவு செய்யப்பட்டதாகவும் எனவே பொங்கல் பண்டிகைக்கு பின்னரே சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva