1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (12:39 IST)

2020-ஆம் ஆண்டுக்கான எல்.கே.ஜி அட்மிஷனை தொடங்கிய பள்ளி

சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியில் 2020-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை இப்போதே ஆரம்பித்துள்ளார்கள். இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


 
 
இந்த காலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு கூட இடம் கிடைத்து விடுகிறது, ஆனால் எல்.கே.ஜி-யில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தான் அவ்வளவு எளிதாக இடம் கிடைப்பதில்லை. அதிலும் சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியில் இடம் கிடைக்க அவ்வளவு போட்டி நிலவுகிறதாம்.
 
இந்த பள்ளியில் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டு வரை எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி கட்டணம் சில லட்சங்கள் தான் என்பது கூடுதல் தகவல்.