வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:09 IST)

காஷ்மீரின் கட்டுப்பாடு, கெடுபிடிகளை தளர்த்த முடிவு: காரணம் என்ன??

காஷ்மீரில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், கெடுபிடிகளையும் தளர்த்த மத்திய அரசி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் 370வது ரத்து செய்யப்படுவதற்கு முன்னரே அங்கு அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டது. அதோடு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை வரவிருக்கும் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இந்த கெடுபிடிகளை மத்திய அரசு தளர்த்த திட்டமிட்டுள்ளதாம். 
ஆம், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தொழுகைகளின் போது கட்டுபாடுகளை தளர்த்து அரசமைப்பு 370 ரத்து செய்யப்பட்டதற்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதை பார்க்க இந்த முடிவு மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தொழுகை மற்றும் பக்ரித்தையொட்டி தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் மொபைல் போன், இணைய சேவைகளுக்கு எந்த வித தளர்வும் கொண்டுவரப்படாது என தெரிகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஆங்காங்கே கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அறங்கேறும் நிலையில், விதிகள் தளர்த்தப்படுவதால் என்ன நடக்கும் என ஐயமும் உள்ளது.