1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (14:40 IST)

தமிழகத்தில் 2000 பேருக்கு காய்ச்சல், மாஸ்க் அவசியம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இருந்து 2000 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 100 பேருக்கு புதிய வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் இன்புளுயன்சா என்று கூறப்படும் இந்த காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இதில் சுமார் 2000 பேர்களுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
 
Edited by Mahendran