திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (18:01 IST)

பட்ட பகலில் கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க் உரிமையாளர் மனைவியிடம் 20 பவுன் நகை பறிப்பு.....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் உரிமையாளரான இராதகிருஷ்ணன் மனைவி ராமலட்சுமி(56).
 
இவர் நேற்று முருகன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். 
 
இதே போன்று அதே மர்ம நபர்கள் சாத்தூர் அருகே சடையம்பட்டி வளர்நகர் பகுதியில் எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி பேராசிரியரான ராமலட்சுமி(42) என்பவர் நடந்து செல்லும் போது அவரிடமும் அந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த 9 பவுன் செயின், இரண்டு மோதிரம் (3 பவுன்) ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
 
 இவ்விரு சம்பவம் குறித்து தகவலறிந்த சாத்தூர் போலீஸார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை விரட்டி சென்றுள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டதாக தெரியவருகிறது. 
 
மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர் மற்றும் தாலுகா  காவல் நிலையம் உடபட 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து ஹெல்மெட் அணிந்து முகத்தில் முக கவசம் அணிந்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை  சாத்தூர்-ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள நாரணாபுரம் விலக்கில் மர்மமான முறையில் இருச்சகர வாகனம் கிடந்ததாக வந்த தகவலையடுத்து போலீஸார் விசாரணையை தீவிர படுத்தியதில் சாலையோரம் கிடந்த இந்த இருசக்கர வாகனத்தில் தான் அந்த 2 இளைஞர்கள் நகை திருடி சென்றது உறுதியானது. 
 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இருசக்கர வாகனமும் கரூர் பகுதியில் திருடியிருப்பது தெரியவந்தது. 
 
எனவே இருசக்கர வாகனம் நிறுத்தபட்டிருந்த இடத்தில் போலீஸார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.