செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (09:17 IST)

ராசிபுரம் குழந்தை கடத்தல்: ஆதாரம் இருக்கு, பிறந்த 20 குழந்தைகள் எங்கே?

ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை காசுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதன் பின்னர் இந்த வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரும் தரகருமான அமுதா, 2 குழந்தைகளை கொல்லிமலையிலும், ஒரு குழந்தையை சேலம் அன்னதானப்பட்டியிலும் வாங்கியதாகவும் தெரிவித்தார். 
இதன் பின்னர் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் விளைவாக தற்போது கொல்லிமலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் குழந்தைகள் எங்கே என்ற விவரங்கள் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மேலும் குழந்தைகளை வாங்கிய விவரம், யார் யாரிடம் விற்றார் என்பது பற்றியும் மாவட்ட எஸ்.பி அருளரசு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.