1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:02 IST)

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விவகாரம்: 2 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம். 

 
குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி,பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பின் தரத்தை ஆய்வு செய்யக் கோரி ஐ.ஐ.டி. குழுவுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது.