செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 8 ஜூலை 2020 (16:55 IST)

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழப்பு !

தமிழகத்தில்  சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  சிறுமி ஜெயப்பிரியாவை மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சிறுமியைக் கொலை செய்த ராஜேஷ் என்பவனை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இந்த ரணம் ஆறுவதற்குள்  தமிழகத்தில் மற்றோரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் சேகரசன்பேட்டை என்ற பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடல் ஊருக்கு வெளியே உள்ள பகுதியில் எரிந்து நிலையில் சடலாக மீட்கப்பட்டுள்ளது.

மாணவி வீட்டின் அருகே குப்பை கொட்ட சென்றதாக தெரிகிர்றது. தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்  எரிசம்பவ இடத்தில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என நேற்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மணப்பாறை அருகே 17 வயதுள்ள  சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலிஸார் தேடி வந்த நிலையில் பகவன்பட்டியைச் சேர்ந்த ராம்கி என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.