திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (14:50 IST)

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

rain
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்த தொடங்கிய போதிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று காலம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னையை  பொருத்தவரை மேகம் வானமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran