வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:27 IST)

சென்னையில் சிறப்பு தடுப்பூசி மையங்கள்: 45 வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவதை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன
 
ஏற்கனவே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசிக்கு என தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் சிறப்பு தடுப்பூசி மையங்கள் சென்னையின் ஒரு சில இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது 
 
மொத்தம் 15 இடங்களில் சென்னையில் கொரோனா வைரஸ் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த சிறப்பு தடுப்பூசி மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
 
சென்னையில் உள்ள அம்பத்தூர், அயனாவரம், அசோக்நகர், காரம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 15 இடங்களில் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது